Monday, September 12, 2016

மூன்று மாநிலங்களின் (தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா) பங்களிப்புடன் காவிரியில் நீர் உற்பத்தி ஆகிறது. கொடகு / தலகாவேரியில் தொடங்கி பாண்டிச்சேரி வரை சென்று கடலில் முடிகிறது. தமிழகம் 500 வருஷம் மேலாக காவிரி நீரை முதலாக போட்டு டெல்டா (முக்கோணவடிவு) நிலங்களில் விவசாயம் செய்துவருகிறது.  கிருஷ்ண ராஜ சாகர் அணை 1934 ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்பு கர்நாடக விவசாய நிலங்களை விரிவுபடுத்தியது.  இதனால்,  அவர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் ஆனது. 1924 முதல் 1974 ஆண்டு வரை போடபட்ட ஒப்பந்தப்படி காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது (சரியாக தெரியவில்லை). அதன்பின்பு , தமிழகத்துக்கு அதிகம் கிடைப்பதாக கர்நாடகா கூற, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி நீதிமன்ற குழு நிறுவப்பட்டது. அது எந்த மாநிலத்தையும் சாராது ஒரு சுதந்திர குழு. அந்த குழு பல வருட ஆராய்ச்சிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கியது. அதன்படி

மொத்தம் = 740 TMC
தமிழகம் = 419 (227+192) TMC
கர்நாடக = 270 TMC
கேரளா = 30 TMC
பாண்டி = 7 TMC

தமிழக பங்கை கவனித்தால் 227 TMCதமிழ்நாடு நீர்ப்பிடிப்பு மூலமாக,  192 TMC – கர்நாடகா அணையில் இருந்து கிடைக்கும்.  இந்த அளவு அதிகம் என்று அவர்கள் கூற, மறு ஆய்வு செய்து 134 TMC நீரை  நான்கு மாதங்களாக (ஜூன் முதல் செப்டம்பர் வரை) திறந்து விட வேண்டும் என்று காவிரி நீதிமன்ற குழு 2007 ஆம் ஆண்டு உத்தரவிட்டது இந்த அளவு (134 TMC)  கூட கர்நாடகா 2002-2007 ஆம் ஆண்டு திறந்து விட்ட சராசரி நீர் அளவைவைத்து தீர்ப்பு கூறியது. இதில் பங்களிப்பு (தேக்கி வைப்பது மற்றும் நீர் உற்பத்திக்கு) என்று பார்த்தால் கர்நாடகா அதிகம். ஆனால் அவர்களுக்கு கிடைப்பது அதைவிட குறைவு. காவிரி ஆற்றின் வடிநிலை பகுதி தமிழகத்தில் அதிகம், ஆகவே நமக்கு காவிரி நீரின் பங்கும் அதிகம்.  
கர்நாடகத்தில் மலைபகுதிகள் அதிகம் இருப்பதால், நீரை தேக்கி வைக்க முடிகிறது,  அதான் சரியும் கூட. தமிழகம் சம பூமி. இங்க அணை கட்ட கூடிய ஒரே சாத்தியமான மேட்டூரில் அணை இருக்கிறது. சில தடுப்பு அணை, சிறு தண்ணீர் தேக்க அணைகள் சாத்தியம். அதுவும் செய்து ஆகிவிட்டது.

காவேரி நீரின் முக்கிய தேவைகள்.

கர்நாடகா-
தென் கர்நாடக விவசாயம்
பெங்களூரு குடிநீர்

தமிழகம்-
காவிரி டெல்டா விவசாயம்
சென்னை குடிநீர்

குறிப்பு: கரும்பு விளைச்சலில் இந்திய அளவில் கர்நாடகா மூன்றாம் இடம், தமிழகம் நாலாவது இடம். இதற்கு நிறைய நீர் தேவை.

தமிழகத்தின் 70-80% சதவிகித தேவையை காவிரி நதிநீர் பூர்த்தி செய்கிறது. கர்நாடகாவிற்கு 60% சதவிகித தேவையை கிருஷ்ணா நதிநீர் பூர்த்தி செய்கிறது. காவிரி நீர் தென் கர்நாடகாவிற்கு தான்  முக்கிய தேவை (மண்டியா, மைசூரு, பெங்களூரு). இந்த வருடம் பருவ மழை சரியாக பொழியவில்லை என்று கர்நாடகா நீரை திறந்து விட மறுக்கிறது. உச்ச நீதி மன்றம் நேற்று கொடுத்து தீர்ப்பின்படி 12000 cusecs கர்நாடகா 16 செப்டம்பர் வரை திறந்து விட வேண்டும். (11000 cusecs = 1 TMC)

சட்டத்தின் படி தீர்வு காண்பதே அறிவு. பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டும். நவீன பாசன முறைகளை விவசாயத்தில் கொண்டு வர வேண்டும். முக்கியமாக இரு மாநிலங்களும் ஒற்றுமையாக கலந்து பேசி தண்ணீர் தேவையை நிறைவேற்ற வேண்டும்.


எனக்கு தெரிந்த தகவல் இவை மட்டுமே. சில பிழைகள் இருக்கலாம்.